செவ்வாய், 20 நவம்பர், 2012

"மும்பை : பால் தாக்கரே வழியில் பயணிக்கும் "பாசிச" போலீஸ்!



                                  மும்பை ரவுடி பால் தாக்கரே மரணத்தையொட்டி, 2 நாட்களாக நடத்தப்பட்ட கடையடுப்புக்கள், பால் தாக்கரே மீதான மரியாதையால் அல்ல, சிவசேனை ரவுடிகளின் பயத்தினால் தான் என்று, "ஃபேஸ் புக்"கில் கருத்து தெரிவித்ததால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மும்பையை சேர்ந்த 21வயது இளம்பெண் (சிங்கம்) "ஷாஹீன்" என்பவர், தெரிவித்திருந்த கருத்துக்கு "ரேணு" என்ற இன்னொரு இளம்பெண் "like" கொடுத்த பாவத்துக்காக அவரும் கைது செய்யப்பட்டார்.

கருத்து சுதந்திரத்துக்கு கடும் பங்கம் விளைவிக்கும் வகையில், 2000 சிவசேனை குண்டர்கள் அவரது வீட்டிற்கு வந்து ரகளை செய்தனர்.


நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், உடனடியாக ஃபேஸ் புக்கில் தெரிவித்திருந்த கருத்தை நீக்கி விட்டதுடன் வருத்தம் தெரிவித்து புதிய கருத்தையும் பதிவு செய்துவிட்டார்.


என்றாலும் வெறியுடன் திரிந்த "சிவசேனை குண்டர்கள்" ஷாஹீனின் சிறிய தகப்பனாருக்கு சொந்தமான கிளினிக்கை அடித்து நொறுக்கி விட்டனர்.


அதிகார வர்க்கத்தினர், மேற்படி இரு பெண்களின் ஃபேஸ் புக் அக்கவுண்டையும் முடக்கிவிட்டனர்.


போலீசும் தன் பங்குக்கு "மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டது" மற்றும் "தகவல் தொழில்நுட்ப முறைகேடு" என (295A, 64A) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


போலீசின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து, இரு பெண்களையும் தலா ரூ.15,000 ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுவித்தனர்.


மார்க்கண்டே கட்ஜூ கண்டனம் :


மகாராஷ்டிர போலீசின் கைது நடவடிக்கைக்கு "பிரஸ் கவுன்சில் தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டே கட்ஜூ" கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.


இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,


முழு அடைப்புக்கு எதிராக கருத்து சொல்வதை, மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறுவது ஏற்க முடியாது.


அரசியல் சட்டம் 19-1ன் கீழ் இப்படி கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது.


நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. பாசிச சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறவில்லை.


கைது செய்ய உத்தரவிட்ட போலீஸ் மீது உடனடியாக "சஸ்பெண்ட்" அல்லது "கைது" அல்லது "குற்றவியல் நடவடிக்கை" இதில் எது அதிகபட்சமோ, அந்த நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்.


இதை நீங்கள் செய்ய முடியாத நிலையில் அரசியல் சாசனப்படி.. ஒரு அரசை நடத்த தகுதியற்றவராகிறீர்கள்.. இதற்குரிய சட்டவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.


- மறுப்பு மீடியா செய்தி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் ம.ம.க. பிரச்சாரம்!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : மமக கண்டனம்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. இதையொட்டி வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தை ஆக்கிரமிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய சிறுகடை வியாபாரிகளும், வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் முடிவினைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

-ஜே.எஸ்.ரிபாயீ

SDPI நடத்தும் டாஸ்மார்க் ஒழிப்பு போராட்டம்





18-11-12 இன்று SDPI நடத்தும் டாஸ்மார்க் ஒழிப்பு போராட்டம்.
 
வண்ணாரம் பூண்டி
யில் உள்ள டாஸ்மார்க்கை நிரந்தரமாக எடுக்க பொது மக்களிடத்தில் கையழுத்து இயக்கம் நடை பெற்று வருகிறது.
 




நன்றி M.மன்சூர்

வியாழன், 15 நவம்பர், 2012

இந்தியாவில் பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்!



இந்தியாவை ஆளுவது கார்பரேட் நிறுவனங்களே, அவர்கள் நினைத்தால் இந்தியா ஸ்தம்பித்து விடும் என்று எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.
 
“இந்தியாவில் உப்பு முதல் விமானம் வரை தயாரிக்கும் ஏகபோக உரிமை கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும்.
 
கார்பரேட் நிறுவனங்கள் நிறைந்த அமெரிக்காவில் கூட எல்லா துறைகளிலும் இவர்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் உள்ள 19க்கும் மேற்பட்ட பெரும் செய்தி ஊடகங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் கட்டுப்படுத்துகின்றன. மக்கள் எந்த செய்தியை அறியவேண்டும் என்பதையும் அவர்கள்தாம் தீர்மானிக்கின்றார்கள்.
 
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற சூழலும், கூட்டுப் படுகொலைக்கு தலைமை தாங்கிய நபர் மாநிலத்தை ஆளும் அபாயகரமான ஜனநாயகம் தான் இந்தியாவில் உள்ளது. கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த கட்சிக்கும் விருப்பம் இல்லை. இந்தியாவின் முழு ராணுவத்தையும் அனுப்பினாலும் கஷ்மீர் பிரச்சனை தீராது. இதர படையினரை நக்ஸல் வேட்டை என்ற பெயரில் காட்டுக்கு அனுப்பினாலும் பழங்குடியினரின் பிரச்சனைகள் தீராது.
 
40 சதவீத மக்கள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதியுறும் ஒரு நாட்டை எவ்வாறு சூப்பர் பவர் (வல்லரசு) என்று அழைக்கமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் மீது விலைவாசி உயர்வு உள்ளிட்ட போர்ப் பிரகடனம் செய்கிறது அரசு. இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் அணுசக்தி நிலையங்களை நிறுவ அரசு முயலுகிறது. அன்றாடம் உருவாகும் கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பு இல்லாத தேசத்தில் அணுசக்தி கழிவுகளை என்னச் செய்யப் போகின்றார்கள்?
 
சிந்திக்கவும்: * கார்பரேட் நிறுவன பெருச்சாளிகளான டாடா, பிர்லா, ரிலைன்ஸ், மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் இவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த கயவர்கள் கையில் நாடு சிக்கித்தவிக்கிறது, மக்கள் விழிப்படைவார்களா?
 
* அன்றாடம் உருவாகும் சாதாரண கழிவுகளையே பாதுகாக்க நாட்டில் கட்டமைப்பு இல்லை என்ற அருந்ததிராயின் கேள்வி உண்மையானது. இது போன்ற மோசமான ஒரு சூழலில் கூடங்குளம் அணு உலை தேவையா? கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கும் கூட்டம் இதை சிந்திக்குமா?
*மலர் விழி*

சிந்திக்கவும்

எச்சரிக்கை!




திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்து, அதன் மூலம் பிழைப்பு நடத்தும் கபோதிகளே! உங்களுக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு திரானி இருந்தால் இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு சொரனையிருந்தால் குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கருக்கி கொண்டானே நரபழி நாயகன் நாதாரி மோடி. அந்த ஈனப்பயலுக்கு எதிராக படம் எடுங்

கள்! உங்களுக்கு உணர்வு இருந்தால் தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேசதுரோகிகளான RSS கூட்டத்திற்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைபடம் இயக்கும் இயக்குனர்களே! அடிப்படை அறிவில்லாமல் செயல்படும் நடிகர்களே! உங்களுக்கு உண்மையிலேயே ஆண்மை இருந்தால் மேலே சொன்னவைகளை வைத்து படம் உருவாக்குங்கள்! அல்லது அடக்கிக் கொண்டு சும்மா இருங்கள்! உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்! உணர்வுகளை சீண்டி உறக்கத்தை இழந்து விடாதீர்கள்! எச்சரிக்கை!