சனி, 18 ஆகஸ்ட், 2012
கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்திருக்கிறது.
கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம், கலவரத்தில் முடிந்திருக்கிறது.
மும்பையில் நேற்று அசாம் கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டம் ஒன்றில்
வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கலவரத்தாலும், துப்பாக்கிச் சூட்டாலும், 2 பேர் உயிரிழந்தனர். 55 பேர்
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனங்கள்
கொளுத்தப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே கலவரம்
ஓய்த்திருக்கிறது.
அசாமில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து, ரசா அகாடமி என்ற அமைப்பினரால்
ஏற்பாடு செய்யப்பட்டு, மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று பிற்பகல் போராட்டம்
நடைபெற்றது. இவர்களது போராட்டம், அசாம் கலவரத்தில் தொடர்புடைய இரு
தரப்பினரில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நடத்தப்பட்டது.
அதாவது, மியான்மர் அகதிகளாக வந்து அசாமில் குடியேறிய மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தை நடத்தினர், ரசா அகடமி அமைப்பினர்.
அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
அப்போது போராட்டக்காரர்களில் சிலர் பாதுகாப்பிற்கு வந்திருந்த
காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதோடு, அங்கிருந்த வாகனங்களைத்
தீயிட்டும் கொளுத்தினர். அதிலிருந்து துவங்கியது கலவரம்.
அரசு பஸ்கள், வாகனங்கள் மீது சரமாரியாக கல்வீச்சு நடைபெற்றது. தனியார்
செய்தி தொலைக்காட்சிகளின் 3 ஒளிபரப்பு வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அதை
தடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். ரிசர்வ் போலீஸ் படை வேனும்
எரிக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்திய காவல்துறையினர், பின்னர்
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். கலவரக்காரர்கள்
அப்போதும் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். எண்ணிக்கை சொல்லப்படாத அளவில் பலர் காயம்
அடைந்தனர்.
கலவரத்தின் போது போலீசாரின் துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரணை நடக்கிறது.
கலவரத்துக்கு காரணமானவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்த விஷமிகள் சிலரின்
அடையாளம் தெரிந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும்
போலீசார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து மகாராஷ்ட்ர முதல்வர் ப்ரித்விராஜ் சவான்
ஆறுதல் கூறினார். அவர், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் வன்முறையில்
இறங்கினர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மும்பை குற்றப்பிரிவு
காவல்துறையிடம் இது குறித்த விசாரணை ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரணையை
தொடங்கி உள்ளனர்” என்றார்.
போராட்டத்தை ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பான ரசா அகாடமியின்
பொதுச்செயலாளர் முகமது சயீத், இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை என்று கூறினார். போராட்டம் நடைபெற்றபோது யாரோ சிலர்
திடீரென உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து கிடைக்கும் தகவல்களும், இது நிச்சயமாக ‘வெளி வேலை’ என்பதாகவே
உள்ளது. ரசா அகாடமி அமைப்பு வன்முறையில் இறங்கி, துப்பாக்கிகளை பறித்துச்
செல்லும் ரகத்திலான அமைப்பு அல்ல.
வியாழன், 16 ஆகஸ்ட், 2012
பெங்களூருவை தாக்கிய திடீர் வதந்தி. பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள். (படங்கள் இணைப்பு)
பெங்களூருவை திடீரென ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வதந்தி காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தமது பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறியபடி உள்ளனர். “அசாம் பாணியிலான கலவரம் பெங்களூருவில் துவங்கப் போகின்றது” என்பதே, வதந்தி
.
“அசாம் பாணியிலான கலவரம்” என்று கூறப்பட்டுள்ளதால், வட கிழக்கு மாநில மக்களை குறிவைத்த கலவரம் என்பதே வதந்தியின் அர்த்தம். நகரை விட்டு இரவோடு இரவாக வெளியேறிக் கொண்டுள்ளவர்களும், வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களே. இதில், பெங்களூருவில் படிக்கும் வட கிழக்கு மாநில மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடக்கம்.
நேற்றிரவு பரவத் துவங்கியது இந்த வதந்தி. “கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும்” என்றபதை தவிர வேறு விபரம் ஏதும் கிடையாது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமாக இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.
நேற்று இரவே, பெங்களூரு ரெயில் நிலையத்தில் திடீரென ஏராளமானவர்கள் பெட்டி படுக்கைகளுடன் வந்து இறங்கினார்கள். கிடைக்கும் ரயிலை பிடித்து, எப்படியாவது கர்நாடகாவை விட்டு வெளியேறினால் போதும் என்ற மன நிலையிலேயே அநேகர் இருந்தனர். இதனால், நேற்றிரவில் இருந்து பெங்களூருவில் இருந்து வடக்கே செல்லும் அனைத்து தொலைதூர ரயில்களும் நிரம்பி வழிகின்றன.
கர்நாடகா அரசு, அனைவரது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையிலும், நகரை விட்டு வெளியேறுபவர்கள், தொடர்ந்து வெளியேறிக் கொண்டுதான் உள்ளார்கள்.
இதற்கு மற்றொரு காரணம், மைசூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பரவி, பீதியை கிளப்பி விட்டிருப்பதுதான்.
மைசூரில், கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர் உண்மையில் இந்தியரே கிடையாது. திபெத்தை சேர்ந்தவர். ஆனாலும் இவரது முக அடையாளத்தை வைத்து, வட கிழக்கு மாநிலத்தவர் என்று கருதி தாக்குதல் நடத்தப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது.
இவரைத் தாக்கிவிட்டு ஓடியதாக கூறப்படும் இருவரை மைசூர் போலீஸ் தேடிவருகின்றனர்.
அசாம் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன், மும்பையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அதனால், இந்த வதந்தியை வட கிழக்கு மாநில மக்கள் லேசாக ஓதுக்கிவிட தயாரில்லை என்கிறார்கள்.
தற்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள பதட்டம், உடனடியாக தணிந்து விடாது போல தோன்றுகிறது. கர்நாடகாவின் மற்றைய பகுதிகளுக்கும் பரவினால், நிலைமை மோசமடையும்.
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாம் மக்களுக்கு நிவாரணம்! ரிஹாப் சாதனை!
அஸ்ஸாமில்
போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும்
ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.
ரிஹாப்
இந்தியா பவுண்டேசன் பொதுச் செயலாளரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஒ.எம்.அப்துல் ஸலாம்
முகாம்களில் நடைபெறும் துயர் துடைப்பு பணிகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தி
வருகிறார்.
தினமும்
150 ரிஹாப் தொண்டர்கள் சேவை களத்தில் பணியாற்றி வருகின்றனர். முதல்
கட்டமாக உணவு, துணிகள், மருந்து ஆகியவற்றை முகாம்களுக்கு கொண்டு சேர்ப்பதே
தங்களுடைய பணி என்று ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறுகிறார். அத்துடன் அகதி
முகாம்களில் தங்கியிருப்போர் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பிச்
செல்லவும், அவர்களுடைய மறுவாழ்வுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும்
செய்வோம் என அவர் தெரிவித்தார்.
சேதமடைந்த
வீடுகளை புனரமைப்பது, தற்காலிக ஷெல்டர்களை அமைப்பது ஆகிய பணிகளை ரிஹாப்
தன்னார்வ சேவைத் தொண்டர்கள் செய்து வருகின்றனர். காணாமல் போனவர்கள், மரணம்,
வன்முறை, வீடு சேதம், இதர அத்துமீறல்கள் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கை
மேற்கொள்ள வழக்கறிஞர்கள் அடங்கிய சட்ட உதவிக்குழு, மருத்துவ சேவைக்கு
டாக்டர்கள், பார்மஸிஸ்டுகள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோரின் சேவையையும்
ரிஹாப் அளித்து வருகிறது.
ரிஹாப்
இந்தியா பவுண்டேசனுக்கு உங்கள் உதவிகளை செய்திட நினைக்கும் நல்ல
உள்ளங்கள் அதை எப்படி அனுப்புவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் puthiyathenral@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.
பர்மா விசயத்தில் வாய் திறக்காத அரசியல் கட்சிகள்...............!!
நம் சொந்தங்களுக்காக நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாமே.....
அன்பு சகோதரர்களே.....
அன்பு சகோதரர்களே.....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
பர்மாவில் நம் சொந்தங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டும் இந்திய, தமிழக அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் இருந்துவருகிறார்கள்,
நம் சொந்தங்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டும் கொஞ்சம் கூட மனிதநேயமின்றி, ஈவு இரக்கமின்றி நமது அரசியல் கட்சிகள் நடந்து வருவது நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, தொப்பியை அணிந்து கொண்டு நோன்பு கஞ்சி குடிக்க வருகை தரும் அரசியல் கட்சிகள் பர்மாவில் முஸ்லிம்கள் கொடூரமான முறையில் தாக்கப்படும் போது வாய் திறக்காமல் இருப்பதன் காரணமென்ன........???
உலகமே திரும்பி பார்க்கும் அளவில் இன சுத்திகரிப்பை நடத்தி கொண்டிருக்கும் பயங்கரவாத பர்மா அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் அலை அலையாக ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது,
இந்நிலையில் துருக்கி அதிபரின் மனைவி நேரடியாகவே பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினரை ஆரத்தழுவி, கட்டிபிடித்து ஆறுதல் கூறி தான் கொண்டு சென்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கி விட்டு வந்திருந்தார்,
அதேபோல் சவூதி அரேபியாவும் 250 கோடி ரூபாயினை பாதிக்கப்பட்ட தமது குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளது,
அத்துடன் உலகளாவிய முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து குரல் கொடுப்பதால் ஆட்டம் கண்டு போன பர்மா விழிபிதுங்கி நிற்பதையும் கண்டு வருகிறோம்,
அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நமது சொந்தங்கள் அகதிகலாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான நிவாரணம் முஸ்லிம் உலகத்தினர் செய்து வந்தாலும், நாமும் நமது பங்களிப்பாக நமது குடும்பத்தினருக்கு கட்டாயம் செய்ய வேண்டும்,
ஒவ்வொரு இயக்கத்தினரும் அவரவர் சார்ந்த இயக்கத்தின் தலைமையை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஜமாஅத்தினரும் அந்தந்த ஊர் ஜமாஅத் நிர்வாகிகளையும் வலியுறுத்தி பர்மாவிலுள்ள நமது சொந்தங்களுக்காக வசூல் செய்ய சொல்லி நாமும் நமது பங்களிப்பை செலுத்தலாமே.....
நாம் பெரிய அளவில் செய்யவில்லை என்றாலும் தமிழக முஸ்லிம்களின் சார்பில் நாம் சுமாராக 10 கோடி ரூபாயாவது கொடுக்க வேண்டும்,
நாம் எந்த அரசியல் கட்சியையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை, எந்த அரசியல்வாதியையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை...... யாரும் நம் சொந்தங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை என்றாலும் நம்மோடு நம்மை படைத்த அல்லாஹ் இருக்கிறான்,
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வெறும் 10 ரூபாய் கொடுத்தாலே போதும் 1 கோடி முஸ்லிம்களுக்கு 10 கோடி ரூபாய் சேர்ந்துவிடும்.....
இந்த தருணத்தில் நாமும் நமது அரசியல் கட்சியை இனங்கண்டு கொள்ள வாய்ப்பாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான்,
இப்படி செய்யலாமா......? உங்களுடைய கருத்துக்களை சொல்லவும்

அன்புடன் உங்கள் சகோதரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)