புதன், 25 ஜூலை, 2012

மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு



                       கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநிறைவு கொண்டாடப் பட்டது.
அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்களின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உருவானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று சொல்லப் படுகிறது. நாணயத்தின் ஒருபுறம் தஞ்சைப் பெரிய கோயில், இன்னொரு புறம் ராஜராஜ சோழ மன்னனின் உருவம் மற்றும் கவர்னர் கையொப்பம் என இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நாணயத்தை பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று அத்தனையையும் பிரதிபலிக்கும் விஷயமாக அனைவரும் பார்ப்பதால், இதை வாங்கிப் பாதுகாக்க பலரும் முன்வருவார்கள் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நாணயத்தை பொதுமக்கள் வாங்கும்படி மத்திய அரசு ஆன்லைனில் அறிவித்தல் விட ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு



                         சமீபத்தில் பூமியைப் போன்ற உயிர் வாழத்தக்க கிரகம் ஒன்றினை கலிபோர்னிய பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் கார்னேஜி நிறுவனம் ஆகியன இணைந்து கண்டு பிடித்துள்ளன.
பால்வெளி அண்டத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றினை சுற்றி வரும் இக்கிரகம் பூமியிலிருந்து 22 ஒளிவருடங்கள் தூரத்தில் உள்ளது.

இக்கிரகத்துக்கு 'கிளிசே 581ஜி' எனப் பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு மடங்கு பெரிய இக்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு காணப் படுவதாக விண் தொலை காட்டிகள் மூலம் அவதானித்து விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்.

இங்கு திரவம் அல்லது தண்ணீர் உறைந்த நிலையில் காணப்படுவதாக கலிபோர்னியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டீபன் வோட் என்பவர் உறுதிப் படுத்தியுள்ளார்.

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!




ஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது

ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்

உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.

இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது....

அநீதிகள் எங்கு நடந்தாலும் எதிர்ப்பவனே உண்மையான மனிதன்..அது தன் வீட்டிலாக இருந்தாலும்கூட......
இவற்றை தடுக்கும் வழி இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் உள்ளது....எனவே கண்டிப்பாக share செய்யுங்கள்.....
தமிழால் இணைவோம்

செவ்வாய், 24 ஜூலை, 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! 
சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எது நேர்வழி?  
எது சத்தியம்? 
எதை இறைவன் விரும்புகிறான்?  எதை வெறுக்கிறான்? 
இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? 
இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? 
மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? 
இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: 
எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம்.

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள்.
 " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான்.

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
 
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
 
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
 
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
 
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
 
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.
 
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.
 
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
 
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.
 
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
 
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
 
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
 
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
 
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
 
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
 
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
 
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
 
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
 
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
 
21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
 
22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
 
24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
 
25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
 
26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
 
27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
 
28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.
 
29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
 
30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.
 
31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
 
32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
 
33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.
 
34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
 
35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
 
36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
 
37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 

38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
 
39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.
 
40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
 
42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
 
43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
 
44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.
 
45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
 
46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
 
47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
 
48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
 
49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.
 
50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.
 
51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.
 
52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.
 
53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.
 
54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்.
 
55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
 
56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
 
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
 
58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
 
59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
 
60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.
 
யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான  நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!

நன்றி: உண்மை உலகம்

Engr.Sulthan

உலக விளைநிலம் வர்த்தகத்தில்...

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விளைநிலங்களில் முதலீடு செய்வது தொடர்பாக சர்வதேச புள்ளிவிபரம் ஒன்றை வாஷிங்டனைச் சேர்ந்த Matrix Project Land என்ற ஆய்வுக்குழு வெளியிட்டிருக்கிறது. 2000ஆம் ஆண்டு முதல் நிலப் பரிவர்த்தனை நடந்துள்ள விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலுமாக, 2000ல் இருந்து இதுவரை 70.2 மில்லியன் ஹெக்டேர்கள் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் விற்கவும், குத்தகைக்கு விடவும் பட்டுள்ளன. அந்த அளவு கொண்ட நிலம் சுமார் காங்கோ குடியரசு நாட்டின் பரப்பளவுக்கு இருக்கும். உலக விவசாய நிலங்களின் அளவில் 1.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. Land Matrix பட்டியலிட்டுள்ள 82 முதலீட்டாளர்களில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டும் 16.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் முதலீடு செய்திருக்கின்றன. இது உலகம் முழுவதிலும் விற்கவோ, குத்தகைக்கு விடவோ பட்ட மொத்த ஹெக்டேர் நிலங்களில் 24 சதவீதமாக இருக்கும்.


இந்தியா, கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து மட்டும் (குறிப்பாக எத்தியோப்பியா, மடகாஸ்கர்) 3.2 மில்லியன் (30 லட்சத்து 20 ஆயிரம்) ஹெக்டேர் நிலங்களும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் (இந்தோனேசியா, லாவே மக்கள் குடியரசு) இருந்து 2.1 மில்லியன் (20 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேர்) நிலங்களையும் இந்தியா வாங்கி இருக்கிறது. அதுபோல் மற்ற நாடுகளில் நிலம் வாங்கிய நாடுகளில் முதல் 10க்குள் இந்தியா வருகிறது. சுமார் 4.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் வெவ்வேறான 113 ஒப்பந்தங்களின் கீழ் விற்கப்பட்டுள்ளன. 2000ல் இருந்து இந்தியா வாங்கியது

• கிழக்கு ஆப்ரிக்க நாடுகளிடம் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர்,
 
• தென்கிழக்கு ஆசிய நாடுகளிடம் இருந்து 20 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேர்,
 
• இந்தியா விற்ற நிலம் 40 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள்,
 
• உள்ளூர் நிறுவனங்கள் வாங்கிய நிலத்தின் அளவு 1 கோடியே 60 லட்சம் ஹெக்டேர்.
 
பெரும்பாலான நிலங்கள் விவசாயம் மற்றும் வனங்கள் உருவாக்குவதற்காக வாங்கப்பட்டுள்ளன. இதில் 30 சதவீத நில பரிவர்த்தனை உணவு பயிர்களுக்காகவும், 20 சதவீத நிலங்கள் உயர் எரிபொருள் உற்பத்திக்காகவும், வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுகள் தயாரிக்கவும் வாங்கப்பட்டிருக்கின்றன.
- Tmmk Ramnad