திங்கள், 18 ஜூன், 2012

ரூ.200 கோடி நில மோசடி புகார்: தமிழக ஆளுநர் ரோசையா நேரில் ஆஜராக ஆந்திரா நீதிமன்றம் சம்மன்




ரூ.200 கோடி நில மோசடி புகார்: தமிழக ஆளுநர் ரோசையா நேரில் ஆஜராக ஆந்திரா நீதிமன்றம் சம்மன் 
ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அமீர்கான் பேட்டை. இங்குள்ள 9.14 ஏக்கர் அரசு நிலத்தை ரோசையா ஆந்திர முதல்வராக இருந்தபோது தனக்கு நெருக்கமான நண்பர்கள் 13 பேருக்கு மலிவு விலையில் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.
 
இதையடுத்து வக்கீல் மோகன்லால் என்பவர் ஐதராபாத் கோர்ட்டில், நில ஒதுக்கீடு செய்ததில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் ரோசையா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.  
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரோசையா மற்றும் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.  
 
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரோசையா மற்றும் விஜயகுமாரி, சாயிரெட்டி, ஷிகானி, மாதுரி உள்பட 13 பேர் மீது 404, 405, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் ரோசையா கடந்த வருடம் செப்டம்பர் 9-ந் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். இருப்பினும், இவ்வழக்கு விசாரணை ஆந்திரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2-ந் தேதி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ரோசையாவிற்கு ஆந்திரா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

-maalaimalar.com