பெரம்பலூரில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம்: 1000 பேர்
கைது
பெரம்பலூர், ஜன. 26:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர்
கிராமத்தில் கடந்த 22ம் தேதி 2 சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து
ஏராளமானோரை வி.களத்தூர் போலீசார் கைது செய்த னர்.
தொடர்ந்து முஸ்லிம்கள் தொழுகை நடத்திவிட்டு வரும் போது 70க்கும்
மேற் பட்ட மாணவர்களையும், பெரியவர்களையும் கைது செய்து வழக்கு போட்ட பெரம்பலூர்
மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
அமைப்பினர் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று திடீர் கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில், அனுமதி
பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது
செய்தனர். இந்த திடீர் கைது சம்பவத்தால் நேற்று பெரம்பலூர் நகரில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.
சை.பைஜுர் ரஹ்மான்.