பெரம்பளூர் மாவட்டம் வி.களத்தூர் என்ற ஊரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள் இங்கு கடந்த 1990 களில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயகத்கத்தினரால் ஒரு பெரிய மதக்கலவரம் தோற்றுவிக்கப்பட்டு இசுலாமிய மத வழிபாட்டுத்தளங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டு முஸ்லிம்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தப்பட்டு இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. காவி தீவிரவாதி...களுக்கு ஆதரவாக களமிரங்கிய காவல்துறை ஆயிரக்கணக்கில் அப்பாவி இசுலாமியர்களை கைது செய்து கொடுஞ்சிறையில் அடைத்தது. உடனடியாக களமிரங்கிய ஜிஹாத் கமிட்டியின் தலைவர் ஷஹித் பழனி பாபா அவர்கள் அவர்களை சட்டரீதியான போராட்டங்களுக்கு பின்னர் விடுதலை ஆக செய்தார்.
அதன் பின்னர் நீண்ட காலமாக அமைதியுடன் காணப்பட்ட வி.களத்தூரில் சமீப காலமாக மீண்டும் காவி தீவிரவாத கும்பல் தனது வெறியை காட்ட துவங்கியுள்ளது. சமீபத்தில் டாக்டர் அப்துல்லாஹ்வின் காரை தாக்கி சேதப்படுத்தி மதக்கலவரத்திற்கு வித்திட்டது ஆனால் ஜமாத்தினரின் துரித நடவடிக்கையால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இசுலாமியர்களை சீண்டி மதக்கலவரத'தை தூண்டும் வேலைகளை செய்து வந்தது காவி தீவிரவாத கும்பல்.
இந்நிலையில் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் காவி தீவிரவாத கும்பலின் வேட்பாளர் படுதோல்வியை தழுவினார். இசுலாமியர்களின் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர் வெற்றி பெற்று ஊராட்சி தலைவரானார் இது பொறுக்காத காவி கும்பல் மீண்டும் மதக்கலவரத்தை துர்ண்டி முஸ்லிம்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு தேர் ரத ஊர்வளங்களை இசுலாமியர்கள் வசிக்கும் வீதிகளில் நடத்தி பள்ளிவாசல்கள் மீது கல்லெறிந்து கலவரத்தை தூண்ட முயற்சித்தது. இது தொடாகதையாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த காவி பயங்கரவாதியின் திருமண ஊர்வளததை சம்பந்தமேயில்லாமல் இசுலாமியர் அதிகம் வசிக்கும் வீதிகள் வழியாக நடத்தி கலவரம் ஏற்படுத்த முயன்ற போது முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெறிவித்தனர். இனைத்த்தொடாந்து நேற்று இரவு திடீரென காவி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களமிரங்கிய காவல்துறை நள்ளிரவில் முஸ்லிம்கள் வீடுகளுக்குள் புகுந்து அங்கு உரங்கி கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என அணைவரின் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி வீடுகளில் இருந்த சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட பள்ளி கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் இளைஞர்களை கொத்து கொத்தாக கைது செய்து கொடூரமாக வீதிகளில் இழுத்து சென்று காவல்நிலையத்தில் அடைத்து வைத்தள்ளார்கள் இது இன்று அதிகாலை வரை தொடாந்தது. தடுத்த பெண்கள் குழந்தைகள் முதியோர் மீதும் காவி மயமாக்கப்பட்ட காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இது எழுதிக்காண்டிருக்கும் இந்த நிலையில் ஆயிரக்கணக்கில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் குழந்தைகளை விடுதலை செய்யக்கோரி காவல்நிலையம் முன் திரண்டுள்ளார்கள். கூச்சலும் குழப்பமுமாக உள்ளது. மறு பகுதியில் இஸ்லாமியர்கள் மீதும் வழிபாட்டுத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தும் வகையில் காவி தீவிரவாதிகளும் திரண்டுள்ளதாக தகவல் வருகிறது.
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இந்த சட்ட விரோத கைதுகளையும், தாக்குதல்களையும் வண்மையாக கண்டிப்பதோடு கைது செய்யப்பட்ட அணைத்து மாணவர்களையும் மற்றும் இளைஞர்களையும் உடனடியாக விடுவிக்கும்படி தமிழக அரசை கோருகின்றது. அத்துடன் நமது சகோதர இசுலாமிய இயக்கங்கள் அணைத்தும் உடனடியாக களமிரங்கி வி.களத்தூர் இஸ்லாமியர்களை பேரழிவில் இருந்து காக்கும்படி கேட்டுக்கொள்கிறது.
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
ஒருங்கினைப்பாளர்,
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
-