பெரம்பலூர், ஜன.23
பெரம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட் டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வி.களத்தூரில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அங்கு இன்று ஒருவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்காக நேற்றிரவு பெண் அழைப்பு வைபவம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களின் தெரு வழியாக வந்தனர். இதற்கு அந்த தரப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு தரப்பை சேர்ந்த ரஞ்சித், நாராயணசாமி, விக்னேஷ், மணிகண்டன் ஆகியோரும், மற்றொரு தரப்பை சேர்ந்த யாக்கூப், யூனஸ், சதாம் உசேன், அப்துல்லா ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். பெரம்பலூர் ஆர்டிஓ ரேவதி அங்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
தகவலறிந்த டிஐஜி அமல்ராஜ், எஸ்பிக்கள் பெரம்பலூர் ராஜசேகரன், அரியலூர் பிரபாகரன், கரூர் சந்தோஷ்குமார் ஆகியோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி : தமிழ் முரசு EPAPER
NANRI : தினகரன் NEWS PAPER.
- சை. பைஜுர் ரஹ்மான்.