புஷ்ரா சேவை அமைப்பின் 16ம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! |
துபை டேராவில் அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 16 ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது .
தலைவர் A .ஷேக் தாவூத் தலைமையில், நடைப்பெற்ற இவ்விழாவிற்கு பொதுச் செயலாளர் A .அப்துல் சலாம் முன்னிலை வகித்தார் .
தலைவர் A. ஷேக் தாவூத் தமது தலைமை உரையில் தாம் தலைவராக இருந்தபோது நடைப்பெற்ற புஷ்ராவின் வளர்ச்சியும், இந்த புதிய வருடத்தில் (2013) நமது சேவை அமைப்பு செய்ய வேண்டிய பணியை பற்றி பேசினார் .
மேலும் அவர் புதிய நிர்வாகிகள் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்களை தெரிவித்தார். தான் தலைராக இருந்த போது ஏதும் குறைகள் இருந்தால் அதற்காக மனம் பொருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வட்டியில்லா கடன் திட்ட பொருப்பாளர் S .முஹம்மது யூனுஸ் 2012ஆம் ஆண்டு அறிக்கை வாசித்தார் .அதில் திருமண உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி இதர உதவி உள்பட 50,000 ரூபாய் செலவு செய்ததாக கூறினார் .
இந்த நிகழ்ச்சியில் பொருப்புகள் மாற்றி அமைக்கப் பட்டது K .A . அப்துல் ஹக்கீம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தலைவர் தமது உரையில் இந்த வருடம் 2013ல் 90,000 ரூபாய் வரை உதவி வழங்க இருப்பதாக கூறினார் . கடந்த ஆண்டு 2012 ல் சிறப்பாக செயலாற்றிய ஷேக் தாவுத், அப்துல் சலாம் ஆகியோருக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப் பட்டது.
விழாவின் இறுதியாக S .சதக்கத்துல்லா நன்றியுரை ஆற்றினார். இந்த நிழச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது . வந்திருந்த அனைவரும் இரவு உணவு கொடுக்கப்பட்டது. இரவு உணவிற்கு பின்னர் அனைவரும கலைந்து சென்றனர்.
2013 ஆம் புதிய நிர்வாகிகள் பின் வருமாறு :{துபை }
தலைவர் : K .A. அப்துல் ஹக்கீம் .
துணைத்தலைவர் : M .அப்துல்லாஹ் பாஷா .
செயலளார் : S . நூர் முஹம்மது .
துணை செயலாளர் : A .ஷபியுல்லாஹ் .
பொருளாளர் : F . அப்துல் ரஹ்மான் .
துணை பொருளாளர் : F .முஹம்மது இஸ்மாயில் .
வட்டி இல்லா கடன் திட்டம்
தலைவர் : S .முஹம்மது யூனுஸ் .
துணைத்தலைவர் : E . சாதிக் பாஷா .
உறுப்பினர் இல்லாதவருக்கு கடன் கொடுக்கும் திட்டம்
தலைவர் A. சாகுல் ஹமிது
துணைத்தலைவர் : S .சதக்கத்துல்லா.
தலைவர் : S .முஹம்மது யூனுஸ் .
துணைத்தலைவர் : E . சாதிக் பாஷா .
உறுப்பினர் இல்லாதவருக்கு கடன் கொடுக்கும் திட்டம்
தலைவர் A. சாகுல் ஹமிது
துணைத்தலைவர் : S .சதக்கத்துல்லா.
வளர்ச்சி குழு பிரிவு :
A .முஹம்மது ரபிக்,
சதக்கத்துல்லா மற்றும்
S .அன்சர் அலி .
தகவல் தொடர்பு (மீடியா) பிரவு
S .பைஜூர் ரஹ்மான் மந்றும் S .நூர் முஹம்மது .
பொதுச் செயலாளர் : A ஷேக் தாவுத் [துபை மட்டும் ]
பொதுச் செயலாளர் : A அப்துல் சலாம் (இந்தியா & வளைகுடா)