சனி, 26 ஜனவரி, 2013

இந்திய விடுதலைக்காக போராடியவர்கள்... மறைக்கபட்ட.. மறுக்கபட்ட... உன்மை....தெரிந்தவை சில தெரியாதவை பல...

 
 
முஸ்லிம்கள் இந்த நாட்டை ஆண்டோம், நாமே இந்த நாட்டை நிர்வாகம் செய்தோம் நாமே இழந்தோம் அதர்க்காக நாமே போரடினோம் ,வென்றோம் ஆனால் போரடிய பெயர் வேரொருவனுக்கா?

1. வரலாற்று நாயகன் திப்பு சுல்த்தான், போர்கள் மற்றும் நவீன ஆயுதங்களால் வெள்ளையர்களை நிலைகுழைத்து வெருண்டோட வைத்தவர் ஆனால் இன்று அவரை பற்றி யாரா...
வது பேசினோமா இவர் தான் பாடு பட்டார் என்று..?

2. இந்திய விடுதலைக்காக வித்திட்ட முதல் போர் சிப்பாய் கழகம், இதில் 90% பங்கேற்றவர்கள் முஸ்லிம்கள் ,80 % கொல்லபட்டவர்கள் முஸ்லிம்கள்,யாருக்காவது இது தெரியுமா? இந்த சிப்பாய் கழகத்தின் படை தளபதி அஹமதுல்லாஹ் ஷாஹ், ஆனால் மங்கள் பாண்டெய் வை பற்றி பேசுபவர்கள் உண்டு, இது பச்சை துரோகம் இல்லையா?

3.முஸ்லிம் ஆட்சியாளர்கள் மார்க்க கடமை என்று ஃபத்வா கொடுத்தார்கள் ஆங்கிலேய படிப்பை துரக்க வேண்டும், அவர்களின் ஆடையை அனிய கூடாது என்று ! இது போன்று வேரு மதத்தவர்களில் எவேரேனும் உண்டா? இதனால் தான் இன்று கல்வியில் பின் தங்கியிருக்கிறது முஸ்லிம் சமுதாயம்!

4.முஸ்லிம் மன்னர்கள் பல நாடுகலாக பிரிந்து கிடந்த மாநிலங்கள், சிற்றூர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே மாநிலமாக தமிழகம் போன்றவற்றை மாற்றினார்களே இது பங்களிப்பு இல்லையா? 800 வருடமாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தார்களே இவற்றை மாற்றி காட்டினார்களே இது பங்களிப்பு இல்லையா?

5.முஸ்லிம் மன்னர்கள் பல வழக்குகளை தீர்ப்பதர்க்காக தனித்தனியே பன்சாயாத்து,மாவட்ட ஆட்சியகம், உயர் நீதி மன்றங்கள்,மாஜிஸ்தரேட் நீதி மன்றங்கள், போன்ற அமைப்பை உருவாக்கி இன்றும் வெற்றி கானுகின்றோமே இது பங்களிப்பு இல்லையா? இன்றும் புழக்கத்தில் உள்ள வகீல்,மாஜிஸ்தரேட்,வாயிதா ,மாசூல், கஜானா ,ஆஜர், போன்ற அரபி வார்தைகளை தந்து உதவியாக இருக்கிறதே இதை மாற்ற முடிந்ததா?

6.தங்கம் ,வெள்ளி நானயங்கள் புழகத்தில் இருந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும் என்று ருபாய் நோட்டுகளை உபயொக படுத்த அறிமுகபடுத்தியவர் மன்னர் முஹம்மது பின் துக்லக், மேலும் இவர் தான் நிலம் சம்பந்தமான வழக்குகளை தீர்க்க முதன் முதலில் சட்டம் இயற்றியவர், இவர் தான் தொல்லியல் துரையையும் நிருவி நாட்டுக்கு பெரிதும் இதை அர்ப்பனித்து உதவியவர்,,

7.முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்க்கு பல காரணங்கள் அமைந்தாலும் மத ரீதியாக அமைந்த காரணம் ,உதுமானிய பேரரசால்(otoman empire) மத தலமையகமாக இயங்கிகொண்டிருந்த துருக்கியை ப்ரிடிஷ் அரசு கைபற்றியது,இதன் காரணமாga முஸ்லிம்கள் பொங்கி எழுந்து மேலும் இந்தியாவில் போராட்ட பங்களிப்பை வீரியப்படுத்தினர்.

8.நாட்டில் பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை அமலில் இருந்த காலத்தில் யாருமே பிரச்சாரம் செய்ய முன் வராத நேரத்தில் ஜுமுஅ சொற்பொழிவை பிரச்சார களமாக மாற்றி ஆங்கிலேயர்களால் சுட்டு தள்ளப்பட்டு தமது பங்களிப்பை காற்றி தமது இன்னுயிரையும் தியாகம் செய்து ரத்த கறை இன்னும் காட்ச்சியளிக்கும் கூனி மஸ்ஜித், தேவ் பந்த், உத்திர பிரதேசம், இந்தியா... இதை போன்று இந்துக்கள் கோயில்களில் செய்தார்களா? கிருஸ்த்துவர்கள் தேவாலயங்களில் செய்தார்களா? சீக்கியர்கள் குருதுவாரங்களில் செய்தார்களா? அல்லது இந்த படுகொலை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா? ஆனால் ஜாலியன் வல்ல பாக் படுகொலை மட்டும் நியாபகம் இருக்கும் .. இது முஸ்லிம்கலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
 
9.இந்திய தேசிய படையை(சுதேசி இயக்கம்) நாட்டிற்க்காக போராட உருவாக்கியவர் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் வாங்க நிதி வசூல் செய்யும் பொழுது இந்தியாவில் போதிய நிதி வசூல் செய்ய முடியாததால் பர்மா சென்று உதவி நாடிய பொழுது வள்ளல் ஹபீப் அன்றய காலத்திலயே 1.5 கோடி நிதி கொடுத்து பெரிதும் உதவினார்,இவரை பற்றி யாருக்காவது இன்று தெரியுமா அல்லது சுதந்திர ஏட்டிலாவது குறிக்க பட்டு இருக்கிறதா? இது முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?.. (குறிப்பு:- அன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை 24 பைசா)...
 
10.அன்று நேதாஜிக்கு தெரியும் முஸ்லிம்கள் தான் நாட்டிற்க்காக தியாக செய்ய முன் வந்து தம் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள் என்று அதனால் தான் நேத்தாஜியின் படையில் படை அனைத்திற்க்கும் தளபதியாக இருந்தவர் ஷா நவாஸ் கான், இவரது படையில் 90% முஸ்லிம்கள் , ரத்தம் சிந்தியது முஸ்லிம்! ரத்தம் சிந்தப்படுவதற்க்கு முஸ்லிம் ! பெயர் மட்டும் முஸ்லிம்களுக்கு இல்லை! இது தான் இந்த நாட்டின் சுதந்திரமான துரோகம்!
 
11.சுதந்திர இந்தியாவில் சுதந்திரதுக்கு முன் பாராளமன்றத்தில் இருபது மந்த்ரிகளில் ஐந்து முஸ்லிம்கள் கரீம் கனி உட்பட ஆனால் இன்று? ஏன் இந்த துரோகம்?
 
12.நாட்டின் பல போராடங்களில் ஜனநாயக போராட்டம் மிகமுக்கியமானது ரயில் எரிப்பு கள்ளுக்கடை மறியல் உப்பு சத்தியாகரகம் போன்றவை, இதர்க்கு காங்கிரஸ் மேலிடம் தான் தலைமையகம் இதன் பொருப்பு அன்றய காலத்தில் சாதரணமானது அல்ல, சுதந்திரம் வாங்கும் வரை இதன் பொருப்பு வகித்து தலைமைக்கு தலைவராக இருந்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்..ஆனால் சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை யாரவது தலைமை பொருப்பில் உண்டா?
 
13.அன்று சுதேசி கம்பெனிக்கு 19 நபர் கொண்ட கமிட்டீக்கு பொது செயளாலராய் இருந்தவர் பக்கிர் முஹம்மது ராஊத்தர், துனை செயளாலராய் இருந்தவர் நம் அணைவருக்கும் தெரிந்த கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம், மேலும் கப்பல் வாங்குவதர்க்காக நிதி திரட்ட பட்டது அப்பொழுது இந்தியா முழுவதும் திரட்டிய நிதி 215.13/- அனா மட்டுமே இந்த நிதி போதாது என்று இதர்க்காக பக்கிர் முஹம்மது ராஊத்தர் மட்டும் கொடுத்த பணம் அன்றே ஒரு லட்சம் ரூபாய், கப்பலின் முதலாளி பணம் தரவேண்டும் டிரைவர்(கப்பலோட்டிய தமிழன் வா.ஊ..சிதம்பரம்) பெயர் எடுக்க வேண்டும், இது தான் சுதந்திர இந்தியாவின் லட்ச்சணம்! இது மெகா துரோகம்!
 
14.கப்பல் ஓட்டியதர்காக கைது செய்யபட்டு விட்டார் சிதம்பரம் ,சிறை சென்றார் இவரை விடுவிப்பதர்க்காக வாய் மூச்சு கூட விட முடியாத காலத்தில் சிறைக்கு வெளியே போரட்டம் நடத்தபட்டது இதில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் போரட்ட களத்தில் முஹம்மது யாசீன் என்பவர் ஒருவர் மட்டுமே கொல்லபட்டார் இவரை பற்றி இந்தியாவில் யாருக்காவது இன்று தெரியுமா?
 
15.ஆங்கிலேயர்களுக்கு தொல்லை கொடுத்ததில் முக்க்ய பங்கு வகித்ததில் வேலு நாச்சியாரும், மருது பாண்டியரும் ஒருவர் இவர்களுக்கு பாதிக்க பட்ட காலத்தில் தங்க அடைக்களம் கொடுத்து உயிரை காத்தவர் மா மன்னர் திப்பு சுல்த்தான்,
 
16.காந்தியின் கள்ளுக்கடை மறியல் முக்கியமானவை, இதில் பங்கேற்றால் மூன்று வருடம் சிறை தண்டனை மட்டும் அல்ல கடுங்காவல் சிறை தண்டனை இதை தெரிந்தும் மதுரை கோரிப்பாளயத்தில் 19 பேர் முன்வந்து போராட்டம் நடத்தினர் இதில் 10 பேர் முஸ்லிம்கள் இன்றும் கோரிப்பாளயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய பட்ட ரிக்கார்ட் உல்லது..இதை கூட மறைத்து ஏன் இந்த துரொகம் முஸ்லிம் சமுதாயத்திற்க்கு?
 
17.அன்று நாட்டின் தேசிய கொடியை ஏந்தி சென்றால் சுடப்படுவார்கள் மேலும் 7 வருடம் சிறை தண்டனை அவ்வாரு கொடி ஏந்தி செல்வதும் சாதரண விஷயமும் அல்ல அவ்வாரு தைரியமுடன் செய்தவர் பட்டியலில் கொடி காத்த திருப்பூர் குமரன் மட்டுமே உள்ளார் , ஆனால் முஹைதீன் கான்,அப்துல் லத்தீப்,அப்துல் ரஹீம், மதுரை பாவா சாஹிபு, மதராசபட்டினம் ஷேக் சாஹிபு போன்ற பெயர்கள் மறைக்க பட்டு விட்டது ஏன் இந்த பச்சை துரோகம்?
 
18.போரட்ட சூட்டை தனிக்க ஆங்கிலேய அரசு புது யுக்தியை கையாண்டது அதில் ஒன்று பட்டம் அளிப்பது.. முஸ்லிம்களுக்கு சம்சுல் உலமா( உலமாக்களின் சூரியன்), கான் சாஹிப் பட்டம் மேலும் மற்ற மதத்தவர்களுக்கு ராவ் பஹதுர் ,சர் பட்டம்.. ஆணால் இந்த பட்டங்களை எல்லாம் துறந்து முழு எதிர்ப்பை காட்டியவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே மற்றவர்கள் இதை பயன் படுத்தி நாட்டிர்க்கு துரோகம் இழைத்து மேல் சென்று விட்டனர் இதனால் தான் இன்று படிப்பில் பின் தங்கிய நிலை நம் சமுதாயத்திற்க்கு.. (குறிப்பு: கான் சாஹிப் பட்டம் இருந்தால் இன்றய கவர்னராக இருந்தால் என்ன மதிப்பும் மரியாதையும் கிடைக்குமோ அதே மதிப்பு அந்த பட்டத்திர்க்கு உண்டு என்பதை என்னி பாருங்கள் ,இதை வைத்து இருப்பவர் அன்று எந்த காவல் நில்யதிலும் சென்று யாரை வெண்டுமானாலும் விடுவிக்கலாம், ஆங்கிலயே அரசு ஆளுனரிடம் நேரடியாக சந்தித்து பேசி தேவையானதை நிறைவேற்றலாம்)
 
19. பல முஸ்லிம்கள் சிறை வாசம் செண்று செத்து மடிந்தனர், ஆனால் நம் முன்னால் பிரதமர் வாஜ்பாய் போராட்ட்த்தை பார்க்க சென்ற பொழுது கைதாகி சிறைக்குள்ளே எழுதிய கடிதம் இன்றும் உள்ளது அதில் அவர் எழுதியது என்னவென்றால் " நான் ஒரு ஓரமாக என்ன நடக்கிறது என்று பார்க்க தான் சென்றிருந்தேன் இதற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"... இவ்வாரு எழுதிய இவரை நம் நாட்டின் பிரதமர் ஆக்கிவைத்தோம் , ஆனால் சிறை சென்று செத்து மடிந்த முஸ்லிம்களின் பெயரை கூட நாட்டின் ஏட்டில் எழுத மணம் வரவில்லை!

நன்றி: சகோதரர் பி.ஜே